எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு -காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
ஜம்மு -காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
இது குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதுடன் குண்டுகளை வீசியது. இதையடுத்து, இந்திய ராணுவம் தகுந்த பதிலடி
கொடுத்தது.
இருதரப்பினருக்கும் இடையே தாக்குதல் தொடர்வதாக கடைசியாக கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லையில் பாலாகோட், திக்வார் மற்றும் கிர்னி ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசியது. இதில் பாலாகோட் பகுதியில் மாலை 3.35 மணியளவிலும், அதைத் தொடர்ந்து திக்வார் மற்றும் கிர்னி பகுதியில் மாலை 4 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த மூன்று பகுதிகளிலும் இந்திய ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இப்பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல் தொடர்கிறது.
இதேபோல, கதுவா மாவட்டத்தில் குர்நாம் எல்லை பகுதியிலும், சர்வதேச எல்லையான ஹீராநகர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கியது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
இந்தத் தாக்குதல் இருதரப்பினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணி வரை தொடர்ந்ததாகத் தெரிவித்தார்.