முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:
Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி; 15-க்கும் மேற்பட்டோர் காயம்

 ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில், புதன்கிழமை அதிகாலை தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உடல்கருகி பலியாகினர்; 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்!

முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் புதன்கிழமை காலை மேலும் ஒருவர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

மறைந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூலை 2026, 10:15 am IST

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 1 ஜூலை 2026, 10:06 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments