தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு 351 எம்எல்ஏ-க்கள் கிடைப்பர்: அன்புமணி
தொகுதி மறுவரையறையால் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பாமக தலைவர் அன்புமணி கூறியது குறித்து...
தொகுதி மறுவரையறையால் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசியதாவது, "காங்கிரஸின் அழுத்தத்தினாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிராக தவெக அரசு தனித் தீர்மானம் கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை என்பது தேவையானதுதான். ஏனெனில், தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், மறுவரையறையால் 59-ஆக உயரும்.
இந்த மசோதாவை 3 மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு உயர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
Advertisement
Advertisement
நாட்டின் 543 தொகுதிகளில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் என்பது 7.1 சதவிகிதமாகும். தொகுதி மறுவரையறையால் இது மாறாது. எம்.பி.க்கள் 39-லிருந்து 59-ஆகவும், 234 எம்.எல்.ஏ.க்களிலிருந்து 351-ஆக உயரும். அவர்களில் 117 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயமாக பெண்கள்தான் வர முடியும். தொகுதி மறுவரையறையால் பெண் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் கூடுதலாக வருவர்.
தமிழ்நாட்டில் ஒரு எம்.பி.க்கு சராசரியாக 20 லட்சம் மக்கள்தொகை. இந்த 20 லட்சம் மக்கள்தொகையை ஒரு எம்.பி.யால் பார்க்க முடிவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தருமபுரியின் 2,000 கிராமங்களை என்னால் பார்க்க முடியவில்லை.
ஆனால், தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், ஒரு எம்.பி.க்கான மக்கள்தொகை 15 லட்சமாகவும், வாக்காளர்கள் 10 லட்சமாகவும் குறையும்.
இங்கிலாந்து நாட்டில் 6.5 கோடி மக்களுக்கு 650 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு ஒரு எம்.பி.க்கு ஒரு லட்சம் மக்கள்தொகைதான். சீனாவில் 140 கோடி மக்கள்தொகைக்கு 3,000 எம்.பி.க்கள்.
தொகுதி மறுவரையறையால் மக்களைச் சாதாரணமாகக் காணலாம். திட்டங்களையும் கொண்டு சேர்க்கலாம்.
தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களில் அதிகமாகும் என்றும், தெற்கில் குறைந்து விடும் என்றும் சிலர் கூறுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது" என்று தெரிவித்தார்.
Tamil Nadu will get 351 MLAs due to constituency delimitation, says PMK Chief Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.