மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!
மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுச் செயலரான 1989 ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு செயலராகப் பதவி வகித்து வரும் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் வரும் 2027 ஜூலை 14 ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நீட்டிக்கப்படுவதாக, அமைச்சரவையின் நியமனக் குழு இன்று (ஜூலை 1) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ரஷியா - உக்ரைன் போர், வளைகுடா நாடுகள் இடையே நிலவும் பதற்றமான சூழல் ஆகியவற்றுக்கு இடையே இந்திய வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதற்கு விக்ரம் மிஸ்ரியின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, இந்திய வெளியுறவுச் செயலராகக் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் ஐஎஃப்எஸ் அதிகாரி விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான், ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இந்திய பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், மியான்மர் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராகவும் அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
The tenure of Union Foreign Secretary Vikram Misri has been extended by another year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.