முகப்பு

கோடை வெளியீட்டில் விக்ரம் - துருவ் திரைப்படங்கள்?

விக்ரம், துருவ் திரைப்பட வெளியீடுகள் குறித்து...

கோடை வெளியீட்டில் விக்ரம் - துருவ் திரைப்படங்கள்?
நடிகர்கள் விக்ரம், துருவ்
பகிர்:

நடிகர்கள் விக்ரம், துருவ் திரைப்படங்களில் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். பவர் ஹவுஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. ரியா ஷிபு உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே போல், நடிகர் துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

இதில், நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரொமாண்டிக் - ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களையும் கோடை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறதாம். கோடை வெளியீடாக நடிகர் அஜித் குமாரின் டேர் டெவிலும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.