மறக்க முடியாத நாள்கள்... ஆதித்யா வர்மா புகைப்படங்களைப் பகிர்ந்த விக்ரம்!
நடிகர் விக்ரம் பகிர்ந்த புகைப்படங்கள்....

நடிகர் விக்ரம் தன் மகன் துருவ் நடித்த ஆதித்யா வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதில், நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரொமாண்டிக் - ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து, “ஒரு அப்பா. ஒரு மகன். அவனின் முதல் திரைப்படம். கேமராவுக்குப் பின் மறக்க முடியாத நாள்கள். 7 ஆண்டுகளைக் கடந்தது ஆதித்யா வர்மா” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.