முகப்பு

விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் “சிட்டி ஆஃப் கோல்ட்” படப்பிடிப்பு நிறைவு...

விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு!
“சிட்டி ஆஃப் கோல்ட்” படப்பிடிப்பு நிறைவு... - Youtube
பகிர்:

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் “சிட்டி ஆஃப் கோல்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் 26 ஆவது திரைப்படம் “சிட்டி ஆஃப் கோல்ட்”. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இந்தப் படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகர்கள் சிவாத்மிகா ராஜசேகர், ராகுல், அழகம்பெருமாள், இன்ஸ்டா பிரபலம் அமலா சாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “சிட்டி ஆஃப் கோல்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, இன்று (நவ. 20) படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இத்துடன், சிட்டி ஆஃப் கோல்ட் படம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகின்றது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “சிறை” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Filming for the movie "City of Gold," starring actor Vikram Prabhu, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.