சிம்புதேவன் - விமலின் நவோரியா பட டீசர்!
நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள “நவோரியா” படத்தின் டீசர் வெளியீடு...
நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள “நவோரியா” திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதைகளமுடைய திரைப்படங்களை இயக்கியதன் மூலம், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவானவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “நவோரியா”.
இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் பாலசரவணன், ஆன் ஷீதல், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ஆரி, நிழல்கள் ரவி, பாலாகி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நவோரியா படத்தின் டீசர் விடியோவை படக்குழுவினர் இன்று (நவ. 20) மாலை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, புதுமையான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.