FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வான பாதயாத்ரா!

பாதயாத்ரா திரைப்படம் குறித்து...

நடிகர் மம்மூட்டி
பகிர்:

நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள பாதயாத்ரா திரைப்படம் திரைவிழாவிற்குத் தேர்வாகியுள்ளது.

கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Advertisement

Advertisement

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து பாதயாத்ரா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டியே தயாரித்த இப்படத்தில் அவரே நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் 31-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை என்பதால் பாதயாத்ராவும் திரைவிழா மூலம் பெரிதாகக் கவனிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The film Padayathra, starring actor Mammootty, has been selected for a film festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.