வைபவ் நடித்துள்ள மணிகண்டா பட டீசர் வெளியீடு!
வைபவ் நடித்துள்ள மணிகண்டா படத்தின் டீசர் வெளியானது குறித்து...
நடிகர் வைபவ் நடித்துள்ள மணிகண்டா படத்தின் டீசர் செவ்வாய்க்கிழமை (நவ. 17) வெளியானது.
ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் மணிகண்டா. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தை ’மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். தாந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியான நிலையில், டீசர் இன்று வெளியாகியுள்ளது.
summary