2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு: யூடியூபர் துருவ் ரதீக்கு பிடிவாரண்ட்!
யூடியூபர் துருவ் ரதீக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக...
யூடியூபர் துருவ் ரதீக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு டிச. 3 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
துருவ் ரதீ தனது யூடியூப் சேனலில் விகாஸ் பாண்டே என்பவர் மீது அவதூறு பரப்பும் விதமாகப் பேசியதாக 2018-ல் தொடரபட்ட வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தில்லி நீதிமன்ற நீதிபதி அனம் ரயீஸ் கான் இந்த பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில், முன்னதாக அக். 31 அன்று துருவ் ரதீக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அதற்கு முன்பு, அக். 17 அன்று நீதிமன்ற அறிவிப்பாணையை துருவ் ரதீயிடம் அதிகாரி ஒருவர் வழங்கச் சென்றபோது அவரது வீடு பூட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் உள்ள அவரது முகவரிக்கு நீதிமன்றம் புதிய சம்மன்களை அனுப்பியுள்ளது.
துருவ் ரதீயின் வழக்கறிஞர் இதுபற்றிக் கூறுகையில், துருவ் ரதீ ஆஸ்திரியாவில் வசிப்பதாகவும், சிஜேபி போராட்டங்களுக்காக அவர் இந்தியா வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
துருவ் ரதீக்கு முதன்முதலாக ஜூலை 2019-ல் இந்த வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.