முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் குளிர்நிலை -7.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது

காஷ்மீர் எல்லைப் பகுதியில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஸ்ரீநகர் பகுதியில் - ஜம்மு - காஷ்மீரின் கோடைக்கால தலைநகர் - இன்று கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த குளிர்நிலை நிலவுகிறது. 

Updated On : 13 ஜனவரி 2021, 12:40 pm IST
ஸ்ரீநகரில் குளிர்நிலை -7.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது
பகிர்:


ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஸ்ரீநகர் பகுதியில் - ஜம்மு - காஷ்மீரின் கோடைக்கால தலைநகர் - இன்று கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த குளிர்நிலை நிலவுகிறது. 

ஸ்ரீநகரில் இன்று குளிர்நிலை மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத குளிர்நிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே குளிர்நிலை கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் எல்லைப் பகுதியின் மற்றப் பகுதிகளிலும் கடுமையான குளிர்நிலையே நிலவுகிறது.

Advertisement

Advertisement

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் முகாமாக செயல்படும் பஹல்காம் சுற்றுலாத் தலம் பகுதியில் இன்று மைனஸ் 11.7 டிகிரி செல்சியஸ் குளிர்நிலை பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments