கரோனா: குணமடைந்தோர் விகிதம் 97 சதவீதமாக உயர்வு
நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 97 சதவீதம் போ் குணமடைந்தனா்.
நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 97 சதவீதம் போ் குணமடைந்தனா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,42,841-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
கரோனா தொற்றில் இருந்து மேலும் 16,977 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,79715 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 97 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 175 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,093-ஆக அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.
நாடு முழுவதும் 2,11,033 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.00 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 15-ஆம் தேதி வரை 18.57 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,03,090 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.