வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை: ப. சிதம்பரம்
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.
இதுபற்றி தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவுகளில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"உண்மை என்னவென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவை பொய் என்பது ஆர்டிஐ-இன் பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
எதிர்பார்த்தபடியே விவசாயிகள் மற்றும் அரசுக்கிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால், அரசிடம்தான் தவறு இருக்கிறது."