மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்வு 
இந்தியா

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

IANS

புது தில்லி: கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடி. இது கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.22,973 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.29,329 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.62,842 கோடி. ரூ.8,757 கோடி செஸ் வரி வசூலாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகம். ஆனால், கடந்த மார்ச் மாதம் 27 சதவீதம் அதிகமான ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டு மனை இடத்தை வகை மாற்றம் செய்யக் கோரி மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்காணிக்க 196 மேற்பாா்வையாளா்கள் நியமனம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தொடக்கம்

சொத்து பிரச்னை: ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக ராணுவ வீரா் புகாா்

பழனி சண்முகநதியில் 10 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT