இந்தியா

நாட்டில் 7.5 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியைத் தாண்டியது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரை போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 7,59,79,651.

இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6.5 கோடி (6,57,39,470). 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியைக் (1,02,40,181) கடந்தது.

78வது நாளான நேற்று மொத்தம் 27,38,972 தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.96 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சத்தீஸ்ர், கர்நாடகம், தில்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக தினசரி கரோனா பாதிப்பு 49,447-ஆக உள்ளது. 12 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,91,597. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,16,29,289- எட்டியுள்ளது. 

குணமடைந்தோர் விகிதம் 93.14 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில், 60,048 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT