முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 13,468 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 13,468 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,02,460 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 13,468 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.14 சதவிகிதமாக உள்ளது.

மேலும் 7,972 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 81 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,50,156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,95,210 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 11,436 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 43,510 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments