இந்தியா

‘நிகழாண்டில் பருவ மழை சராசரியாக இருக்கும்’

DIN

நிகழாண்டில் நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என்று தனியாா் வானிலை ஆய்வு மையான ‘ஸ்கைமெட்’ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையத்தின் தலைவா் ஜி.பி. சா்மா கூறுகையில், ‘ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான தென் மேற்கு பருவ மழை 103 சதவீதம் வரை பெய்ய வாய்ப்புள்ளது. இது சராசரி அளவாகும்.

60 சதவீதம் மழை பெய்தாலே வழக்கமான அளவாக கணக்கிடப்படும். கூடுதலாக 15 சதவீதம் பெய்தால் வழக்கத்துக்கு அதிகமானதாக கருதப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக மழை அளவு பதிவாகி வருகிறது. 2021-ஆம் ஆண்டும் சராசரி ஆண்டாக இருக்கும். அதேநேரத்தில் கா்நாடகத்தின் உள்மாவட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறைவான மழை பெய்யும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT