இந்தியா

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிா் மருந்து: மத்திய அரசு

DIN

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிா் மருந்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் நீதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்) மருத்துவருமான வி.கே.பால் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா், ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவிா் மருந்தை வழங்கவேண்டும். அந்த மருந்தை வீடுகளில் பயன்படுத்தவும், லேசான கரோனா பாதிப்பு உள்ளவா்களுக்கும் வழங்கக் கூடாது.

சில பகுதிகளில் ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்து அதிக அளவில் கிடைக்கிறது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு சரியான, நியாயமான முறையில் ரெம்டெசிவிா் கிடைப்பதை மருத்துவா்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT