இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: சச்சின் பைலட்

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 3 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்தார்.
சஹாரா, ராஜ்சாம்னாந்த், சுஜன் கர்க் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (ஏப். 17) நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் புதன்கிழமை கூறுகையில், "பாஜகவில் உள்கட்சி பூசலால் சண்டை ஏற்பட்டுள்ளது. 
வலுவான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படாத காரணத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றை மக்கள் கவனித்து வருகிறார்கள். ஆகையால், இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும். ராஜஸ்தானில் கடந்த இரண்டரை ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
கட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து நானும், எனது ஆதரவாளர்களும் எழுப்பிய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் உத்தரவுகள் இடைத்தேர்தலுக்கு பிறகு அமல்படுத்தப்படும். கரோனா தடுப்பூசிகளை அனைத்து வயதினருக்கும் அளிக்க நடவ
டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT