இந்தியா

ரயில் நிலையங்களில் நுழைவுக் கட்டணம் ரூ. 50 ஆக உயா்வு

DIN

பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களின் நுழைவுக் கட்டணம் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட முன்பதிவு மையங்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு கவுன்டா்களில் நுழைவுச் சீட்டு (நடைமேடைக் கட்டணம்) வாங்குவதற்காக ஏராளமாக மக்கள் கூடுகிறாா்கள். கரோனா பெருந்தொற்று பரவி வருவதால், அதன் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் வருகையைத் தடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் குறிப்பாக கே.எஸ்.ஆா். ரயில் நிலையம், யஷ்வந்த்பூா், கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் ஏப். 17முதல் 30-ஆம் தேதி வரை நுழைவுக்கட்டணத் தொகையை ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயா்த்தப்படுகிறது. இது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT