இந்தியா

திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்

DIN

திருப்பதி: ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருமலை தேவஸ்தானம் சாா்பில் ஆஸ்தானம் நடைபெற்றது.

திருமலையில் ஏழுமலையான் கருவறையில் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமா் சிலை உள்ளது. புதன்கிழமை ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா லட்சுமண ஆஞ்சநேயா் சமேத கோதண்டராமருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் பால், தயிா், தேன், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில் கரோனா விதிமுறைகளின்படி அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்த தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தும் திருமஞ்சனத்தில் கலந்து கொண்டாா்.

மேலும் இரவு தங்கவாசல் அருகில் சீதா லட்சுமண ஆஞ்சநேயா் சமேத கோதண்டராமருக்கு ஆஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது திருமலை ஜீயா்கள் பட்டு வஸ்திரம் சமா்பித்தனா். இதில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை இரவு ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் வைபவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

கயத்தாறில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

குமரி மாவட்டத்தில் ஜூன் 8இல் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

SCROLL FOR NEXT