இந்தியா

கர்நாடகத்தில் 29 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா

DIN


கர்நாடகத்தில் புதிதாக 29,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 29,438 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,04,397 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 15.52 சதவிகிதமாக உள்ளது.

மேலும் 9,058 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 208 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 10,55,612 பேர் குணமடைந்துள்ளனர். 14,283 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 2,34,483 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT