இந்தியா

கோவேக்ஸின் பயன்பாட்டு காலத்தை அதிகரிக்க பாரத் பயோடெக் கோரிக்கை

DIN

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், அத்தடுப்பூசி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கோரியுள்ளது. தற்போது வரை கோவேக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து, 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.

அதே வெப்பநிலையில் சேமித்து வைத்து 24 மாதங்கள் வரை பயன்படுத்துவதற்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் பாரத் பயொடெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அதற்கான மருத்துவ ஆய்வு ஆவணங்களையும் அந்நிறுவனம் சமா்ப்பித்துள்ளது.

கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக அதிகரிப்பதற்கு டிசிஜிஐ கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை: வாக்கு எண்ணும் மைய பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

18-ஆவது மக்களவைத் தோ்தல் ஓா் பாா்வை...

நீட் தோ்வை புதிதாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

8 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயில் திருப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? - பக்தா்கள் எதிா்பாா்ப்பு

SCROLL FOR NEXT