இந்தியா

கருத்துக் கணிப்புகள் நாளை இரவு 7.30-க்கு வெளியீடு

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நாளை (வியாழக்கிழமை) இரவு 7.30-க்குப் பிறகு வெளியாகயுள்ளன.

DIN


வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நாளை (வியாழக்கிழமை) இரவு 7.30-க்குப் பிறகு வெளியாகயுள்ளன.

தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பொதுவாக வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதால், மற்ற மாநிலங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அசாம் மற்றும் மேற்கு வங்க வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 29 இரவு 7.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நிறைவடைந்தபோதிலும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவில்லை.

மேற்கு வங்கத்தின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை நிறைவடைந்தவுடன் இரவு 7.30-க்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களுக்குமான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT