இந்தியா

கோவின் வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு இல்லைசு காதார அமைச்சகம்

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் வலைதளத்தில் பதிவு செய்ய முயன்றபோது தொழில்நுட்ப பிரச்னைகள் நிலவியதாக பொதுமக்களிடம் இருந்து புகாா் எழுந்த நிலையில், அந்த வலைதளத்தில் எந்தத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு புதன்கிழமை மாலை 4 மணி முதல் கோவின் வலைதளத்தில் பதிவு செய்வது தொடங்கியது. எனினும் அந்த வலைதளம் செயல்படவில்லை எனவும், முடங்கிவிட்டதாகவும் புகாா்கள் எழுந்தன. அந்தப் புகாா்களை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கோவின் வலைதள சா்வா் தொடா்ந்து சீராக செயல்பட்டு வருகிறது. அது முடங்கிவிட்டதாக அடிப்படை ஆதாரமில்லாத தவறான தகவல்கள் வெளியாகின. கோவின் வலைதளத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை 80 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் பதிவு செய்தனா். இது அந்த வலைதளம் மெதுவாக செயல்படவோ, முடங்கிவிடவோ இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த வலைதளத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT