இந்தியா

ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு இயற்கை அரிசி நன்கொடை

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, காய்கறிகள், பழங்கள், வெல்லம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் நன்கொடையாக வழங்கினா்.

கிருஷ்ணா மாவட்டம் விஜயநகரம் பினாகுடூருலங்கா பகுதியை சோ்ந்த ஏழுமலையான் பக்தா் தங்கள் பண்ணையில் இயற்கை முறையில் உரங்களை பயன்படுத்தி விளைவித்த 2, 200 கிலோ அரிசி, காய்கறிகள், பழங்கள், வெல்லம் மற்றும் 15 கிலோ பசு நெய் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கினாா். அவற்றை தேவஸ்தான பொறுப்பு செயல் அதிகாரி தா்மாரெட்டி பெற்றுக் கொண்டாா்.

நன்கொடையாக கிடைத்த பொருட்களை வைத்து 10 நாட்கள் ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் தயாா் செய்து அளிக்கும்படி நன்கொடையாளா் கேட்டதற்கு, வெள்ளிக்கிழமை முதல் நெய்வேத்தியத்திற்கு பயன்படுத்துவதாக தெரிவித்தனா்.

மேலும் திருமலையில் அன்னதானத்திற்கு தேவையான அளவிற்கு இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தி செய்தால், அவற்றை தேவஸ்தானம் நேரடியாக கொள்முதல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT