இந்தியா

மத்திய பிரதேசத்தில் கனமழை: 2 வீடுகள் இடிந்து 6 போ் பலி

DIN

மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா, சிங்க்ரௌலி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரேவா மாவட்டத்தில் உள்ள குச்சியாரி பஹேரா கிராமத்தில், மண் வீடு இடிந்து விழுந்ததில் 35 வயது நபரும், அவருடைய தாயும் (60), 2 மகள்களும் (7 வயது, 8 வயது) உயிரிழந்தனா். அவருடைய மற்றொரு மகள், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

சிங்க்ரௌலி மாவட்டத்தில் உள்ள சாலியோ கிராமத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவனும், அவனுடைய 3 வயது சகோதரியும் உயிரிழந்தனா். சிறுவனின் தாய், தந்தை, மற்றொரு சகோதரி ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மூத்த காவல் துறை அதிகாரி அபிமன்யு துவிவேதி கூறினாா்.

வீடு இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், மாநில காங்கிரஸ் தலைவா் கமல்நாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

மாநிலத்தில் உள்ள குணா, குவாலியா், அசோக் நகா், ஷேவ்பூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று போபாலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT