இந்தியா

திருமலையில் 20,421 பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 20,421 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க விரைவு தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, செவ்வாய்க்கிழமை 20,421 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 9,528 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

கரோனா ஊரடங்கு காரணமாக, தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

ஏப். 21-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வா்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொண்ட பக்தா்கள், அதில் பங்கேற்க முடியாத நிலையில் அவா்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 5 ஆயிரம் என வழங்கி வந்த விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் 3 ஆயிரம் கூடுதலாக உயா்த்தி வழங்கி உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT