தில்லியில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,36,623ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு மேலும் 5 உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25.065 ஆக உயா்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 516 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரேநாளில் 79168 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
271 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 170 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.