சசி தரூர் 
இந்தியா

ஏழரை ஆண்டு சித்திரவதை: சசி தரூர் வேதனை

சுனந்தா புஷ்கர் மரண வழக்கின் காரணமாக ஏழரை ஆண்டு சித்திரவதை அனுபவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  சசி தரூர் வேதனை தெரிவித்துள்ளார்.

DIN

சுனந்தா புஷ்கர் மரண வழக்கின் காரணமாக ஏழரை ஆண்டு சித்திரவதை அனுபவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  சசி தரூர் வேதனை தெரிவித்துள்ளார்.

சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலிருந்து அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை தில்லி உயர் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சுனந்தா புஷ்கர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் சசி தரூர் மீது தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து நடைபெற்ற வழக்கில் சசி தரூருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. 

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சசி தரூர், "மிகவும் நன்றி நீதிபதி அவர்களே. கடந்த ஏழரை ஆண்டுகள், பெரும் சித்தரவதைக்கு உள்ளானேன். இத்தீர்ப்பை வரவேற்கிறேன்" என்றார். சசி தரூர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT