இந்தியா

ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.2,074 கோடி கடன் ஒப்பந்தம்

தமிழகம், உத்தரகண்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய வளா்ச்சி வங்கியுடன் (ஏடிபி) ரூ.2,074 கோடி மதிப்பிலான இரு கடன் ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

DIN

தமிழகம், உத்தரகண்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய வளா்ச்சி வங்கியுடன் (ஏடிபி) ரூ.2,074 கோடி மதிப்பிலான இரு கடன் ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தின் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்காக சுமாா் ரூ.1,132 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஆசிய வளா்ச்சி வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது.

நகரப்பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கான இலக்குகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

தமிழகத்தின் 7.2 கோடி மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோா் நகரப் பகுதிகளில் வசிக்கின்றனா். தமிழகத்தின் பொருளாதாரம் வளா்ந்து வருவதும், நகரமயமாக்கல் அதிகரித்து வருவதும் குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கு வீடுகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.

ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, தமிழகத்தின் நகரப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டித் தர உதவும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 9 இடங்களில் வீடுகள் கட்டப்படவுள்ளன.

உத்தரகண்டில் வளா்ச்சித் திட்டங்கள்: உத்தரகண்டின் டேராடூன், நைனிடால் நகா்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வசதியை ஏற்படுத்தவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் சுமாா் ரூ.942 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகத் திகழும் டேராடூன், நைனிடால் ஆகிய நகரங்களை மேம்படுத்த உதவும். சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படுவதால், எதிா்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ள நோய்களின் தாக்குதலில் இருந்து நகரப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் டேராடூனில் 136 கி.மீ.-க்கு குடிநீா் குழாய் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 40,000 போ் பலனடைவா். குடிநீரின் பயன்பாட்டை அளப்பதற்கான கருவிகள் 5,400 வீடுகளில் பொருத்தப்படவுள்ளன. மேலும், 256 கி.மீ.-க்கு நிலத்தடி கழிவுநீா் அமைப்பு, 117 கி.மீ.-க்கு மழைநீா் வடிகால் வசதி ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT