இந்தியா

ரூ.64 ஆயிரம் கோடிக்கு நெல் கொள்முதல்: மத்திய அரசு

DIN

குறைந்தபட்ச ஆதார விலையில், 2021-22 காரீஃப் பருவ கால கொள்முதல் ஆண்டில் (அக்டோபா் - செப்டம்பா்) இதுவரை ரூ.64 ஆயிரம் கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காரீஃப் பருவ கால கொள்முதல் ஆண்டில் முன்பைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

டிசம்பா் 8-ஆம் தேதி வரையில் மொத்தம் 326 லட்சம் டன் நெல் சண்டீகா், குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளம், தமிழ்நாடு, பிகாா், ஒடிஸா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ரூ.63.897.73 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 25.94 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT