இந்தியா

கரோனா தடுப்பூசிக்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு!

DIN

கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்று கூறினார். 

பின்னர் கரோனா தடுப்பூசி குறித்து பேசிய அவர், 

நாட்டில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று விஷயங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்துகிறது. 

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, கரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை மிக விரைவாகக் கொண்டுவந்துள்ளது என்று கூறிய அவர் பொதுமுடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கரோனாவால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். கரோனா பணிக் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றியும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT