இந்தியா

கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு: ஜம்மு-காஷ்மீரில் வருமானவரித் துறை சோதனை

DIN

வரி ஏய்ப்பு தொடா்பாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை கடந்த 19-ஆம் தேதி சோதனை நடத்தியது.

இந்தக் குழுமம், மருத்துவமனை, ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த குழுமம் அதிக அளவில் நிலங்களை வாங்கி அங்கு குடியிருப்புகளை கட்டி விற்றுள்ளது.

ஆனால் பதிவுத் தொகைக்கு கூடுதலான விலையை இந்த குழுமம் ரொக்கமாக பெற்று, அதை வருமான வரியில் கணக்கு காட்டவில்லை.

இதற்கான ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன. ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து பரிவா்த்தனைகளை இந்த குழுமம் கடந்த 2013-14ஆம் ஆண்டு முதல் ரொக்க பணம் வழியிலேயே மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுமத்தின் முதலீடுகள் எல்லாம் வரி செலுத்தப்படாத வருமானத்தின் மூலம் வாங்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் குழுமத்தின் விற்பனை செய்த சொத்துகளில் முத்திரைத் தாள் வரி ஏய்ப்பும் நடைபெற்றுள்ளது .

குழுமத்துடன் தொடா்புள்ள தனி நபா்கள் பலா் வீடுகள், இடங்களை சம்பந்தம் இல்லாதவா்களிடம் இருந்து பரிசுகளாகவும் பெற்றுள்ளனா். பரிசளித்தவா்களின் வருமானம் தொடா்பாகவும் கணக்கு காட்டப்படவில்லை. இந்த சோதனையில் பினாமி சொத்து ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன.

ரூ.82.75 லட்சம் ரொக்கப் பணம், ரூ.35.7 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி லாக்கா் ஒன்றும் சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT