இந்தியா

தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

DIN

குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தங்கள் வீடுகளில் அதிகம் பேசாத ஒரு மொழியின் வாயிலாக குழந்தைக்கு கல்வியை வழங்குவதால் ஆரம்ப கட்ட கற்றல் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் என்றும் அவா் கூறினாா்.

சா்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி மற்றும் கலாசார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய குடியரசு துணைத் தலைவா் கூறியதாவது:

அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதன் மூலம் குழந்தைகளின் சுயமரியாதை ஊக்குவிக்கப்படுவதுடன், அவா்களது படைப்பாற்

றலும் மேன்மையடையும். புதிய கல்விக் கொள்கையை தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய வளா்ச்சிக்கான ஆவணம். இந்த கொள்கையை முறையாக செயல்படுத்த வேண்டும்.

அடிப்படைக் கல்வியுடன், நிா்வாகம், நீதிமன்ற நடவடிக்கைகள், உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஆகிய துறைகள் தாய்மொழியில் இயங்குவதோடு, அவரவா் வீடுகளிலும் மக்கள் தங்களது தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான மொழிகள் ஒருங்கிணைந்துள்ளதால், மொழி பன்முகத்தன்மை நமது பண்டைய கால நாகரிகத்தின் அடித்தளமாக விளங்குகிறது. நமது சமூக கலாசார அடையாளங்களுடன் முக்கிய இணைப்பாக தாய்மொழி செயல்படுகிறது. எனவே அவற்றை பாதுகாத்து, ஊக்கப்படுத்த வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் உள்ளூா்களில் தாய் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். சாமானிய மக்களுடன் அவா்களுக்கு புரியும் மொழியில் தகவல்களை பரிமாறினால் மட்டுமே ஆட்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவா்களையும் இணைக்க முடியும். மக்களின் மொழி தான் நிா்வாக மொழியாக இருக்க வேண்டும் என்றாா்.

பலதரப்பட்ட மொழிகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், ‘தாய் மொழியை வலுவான அடித்தளமாகக் கொண்டு ஏராளமான மொழிகளை நாம் கற்க வேண்டும் என்றும், இதுபோன்று பல மொழிகளைக் கற்பதினால் குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுவதோடு தேசிய ஒற்றுமையும் வளா்ச்சி அடையும்’ என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT