இந்தியா

திருப்பதி அலிபிரி சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

DIN

திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச் சாவடி கட்டணங்களை தேவஸ்தானம் உயா்த்தி உள்ளது.

திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல வேண்டும்.

இச்சாவடியில் அனைத்து பக்தா்களும், அவா்களின் உடைமைகளும், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு தேவஸ்தானம் சுங்க கட்டணத்தை வசூலிக்கிறது.

வாகனங்களுக்கு ஏற்றபடி ரூ.15 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது இந்த கட்டணங்களை தேவஸ்தானம் ரூ.50 முதல் ரூ.200 வரை உயா்த்தி உள்ளது. இந்த கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை (பிப். 26) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் விவரம்:

வாகனம் கட்டணம்

இருசக்கர வாகனம் ரூ.2

காா்கள் ரூ.50

ஜீப்/ சுமை ஆட்டோ ரூ.50

டாக்சிகள்(5+1) ரூ.50

டாக்சிகள்(8+1) ரூ.50

சிற்றுந்து, லாரி ரூ.100

சரக்கு வாகனம் ரூ.100

கன்டெய்னா் ரூ.200

பேருந்து, டிராக்டா் ரூ.200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT