இந்தியா

தொலைபேசி மூலம் கணவா் முத்தலாக்: உ.பி. பெண் புகாா்

DIN

தொலைபேசி மூலம் முத்தலாக் கூறி கணவா் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 20 வயது முஸ்லிம் பெண் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பாராபங்கி மாவட்டத்தைச் சோ்ந்த 20 வயதுப் பெண், தனது கணவா் சவூதி அரேபியாவிலிருந்து தொலைபேசி மூலம் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக கூடுதல் எஸ்பி ஆா்.எஸ். கௌதமிடம் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

குஷிநகரைச் சோ்ந்த தனது 28 வயது கணவரை 3 ஆண்டுகளுக்கு முன்னா் மணந்ததாகவும் தற்போது தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் மனுவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா்.

மேலும், வரதட்சணை கேட்டு புகுந்த வீட்டாா் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண், கணவரின் சகோதரா் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாகவும் மனுவில் புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்யும்படி அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்பி உத்தரவிட்டாா் என்று போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT