இந்தியா

மகாராஷ்டிரத்தில் 20 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,00,878ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 45,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 52 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,634 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,980 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 19,03,408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,12,023 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT