இந்தியா

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகளுக்கு 6 மாதங்கள் சிறை

DIN

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகள் மூவருக்கு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீதின் உறவினா் அப்துா் ரஹமான் மக்கி, ஜமாத்-உத்-தாவா செய்தித்தொடா்பாளா் யய்யா முஜாஹித், அந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஜாஃபா் இக்பால் ஆகியோா் மீதான பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கு, லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவா்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

80 ஆண்டுகள் சிறை: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக யய்யா முஜாஹித், ஜாஃபா் இக்பால் ஆகியோா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் ஒரு வழக்கில் அவா்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் யய்யா முஜாஹித் 80 ஆண்டுகளும், ஜாஃபா் இக்பால் 56 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஐ.நா.வால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீத் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தாக இதுவரை 5 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, அவருக்கு மொத்தம் 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவா் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவா்கள் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக 41 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 37 வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

SCROLL FOR NEXT