கோப்புப் படம் 
இந்தியா

இடைநீக்க பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருடன் சந்திப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக உறுப்பினர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்தனர். 

DIN


மகாராஷ்டிர சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக உறுப்பினர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்தனர். 

மகாராஷ்டிர பேரவையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக உறுப்பினர்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மும்பை ஆளுநர் மாளிகைக்குச் சென்று பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்து பேசினர். 

ஆஷிஷ் ஷெலார், பராக் அல்வானி, அதுல் பட்கல்கர், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, ஹரிஷ் பிம்பலே, அபிமன்யு பவார், ஜெய்குமார் ராவல், கீர்த்திகுமார் பாங்டியா, கிரிஷ் மகாஜன், ராம் சத்புட் மற்றும் சஞ்சய் குட் ஆகிய 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 5) முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT