இந்தியா

கர்நாடக ஆளுநராக ஜூலை 11-ல் பதவியேற்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர்

PTI

கர்நாடகாவின் ஆளுநராக ஜூலை 11ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பதவியேற்கிறார்.

மாநிலத்தின் 11வது ஆளுநராக காலை 10.30 மணியளவில் தாவர்சந்த் கெலாட்(வயது 78) பதவியேற்கவுள்ளார்.

நாட்டில் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதில், கர்நாடகத்தின் ஆளுநராக மத்திய சமூகநீதித் துறை அமைச்சராக தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, ஜூலை 7ஆம் தேதி துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்தித்து தனது எம்.பி. பதவியை கெலாட் ராஜிநாமா செய்தார்.

இவர் மூன்று முறை மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT