கேரளத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிணற்றை சுத்தம் செய்ய சென்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிணற்றை சுத்தம் செய்ய சென்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் இதுபற்றி கூறியது:
"கொல்லம் அருகே 100 அடி ஆழ கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதில் இரண்டு பேர் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினர். நீண்ட நேரம் ஆகியும் கிணற்றில் இறங்கியவர்களிடமிருந்து எந்த சத்தமும் வராததால், 3-வது நபர் கிணற்றில் இறங்க முடிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, 4-வது நபரும் கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றில் இறங்கிய நால்வரிடமிருந்தும் எவ்வித சத்தமும் வராததால் கிராமத்தினர் அச்சத்தில் தீயணைப்புத் துறையினரைத் தொடர்புகொண்டனர்."
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 4 பேரும் உயிரிழந்தனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவருக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள்:
சோமராஜன் (53)
ராஜன் (36)
மனோஜ் (32)
சிவபிரசாத் (24)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.