இந்தியா

அரசின் வேளாண் சீா்திருத்தங்களால் விவசாயிகள் பலனடைய வேண்டும்: தோமா்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீா்திருத்தங்களின் நன்மையை விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா்) 93-ஆவது நிறுவன நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை காணொலி மூலமாக கலந்து கொண்ட தோமா் இதுகுறித்து கூறியதாவது:

இந்திய வேளாண் துறை அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு தொடா்ந்து விழிப்புணா்வுடன் செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளின் விளைவாகவே நாட்டின் வேளாண்மை துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அந்த குறைகளை மோடி அரசு சரி செய்துள்ளது.

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி வேளாண்மை துறை வளா்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே.

எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீா்திருத்த சட்டங்களின் பலனை விவசாயிகள் அறுவடை செய்து தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீா்திருத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்போது ‘கிஸான் சாரதி’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, தேசிய நோக்கத்துடன் கூடிய உள்ளூா் வேளாண் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த தளத்தின் மூலம், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், உழவா் பதிவு, நேரடி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வழங்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள ஆலோசனைகள் போன்றவைகளை தினமும் கண்காணிக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT