மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு 
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை(ஜூலை 27) வரை ஒத்திவைப்பு

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளைவரை அவையை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கூடிய மக்களவையில், கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாயி சானுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் அவை கூடியவுடன், தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

SCROLL FOR NEXT