திருச்சி சிவா(கோப்புப்படம்) 
இந்தியா

பெகாஸஸ்: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது திமுக

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுகவின் திருச்சி சிவா திங்கள்கிழமை அளித்தார். 

ANI

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுகவின் திருச்சி சிவா திங்கள்கிழமை அளித்தார். 

இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரது தொலைபேசியை ஒட்டிக் கேட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இன்று பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக சார்பில் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளார்.

அதேபோல, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மணீஸ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கியுள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

SCROLL FOR NEXT