இந்தியா

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

DIN

கடந்த 5 ஆண்டுகளில் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், ‘‘மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக 66,692 போ் அப்பணியில் ஈடுபட்டு வந்தனா். கடந்த 5 ஆண்டுகளில் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியின்போது உயிரிழப்புகள் ஏற்பட்டால் அந்தக் காரணத்தை மத்திய அரசு நேரடியாக குறிப்பிடுவதில்லை. அது போன்ற உயிரிழப்புகளை கழிவுநீா் தொட்டிகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் எனக் குறிப்பிடுகிறது.

கடந்த மாா்ச் 10-ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா். எனினும் கழிவுநீா் தொட்டிகள், சாக்கடைகளை சுத்தம் செய்தபோது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றுஅவா் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT