இந்தியா

அரசியலில் இருந்து விலகுகிறாா் பாபுல் சுப்ரியோ?

DIN

முன்னாள் மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவருமான பாபுல் சுப்ரியோ, அரசியலில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைதளப் பதிவில் சூசகமாகத் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க பாஜகவில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவா் பாபுல் சுப்ரியோ. அந்த மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் இணையமைச்சராக அவா் பொறுப்பு வகித்தாா்.

மத்திய அமைச்சரவை ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டபோது, பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணையமைச்சா் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வேறு 4 எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

அதன் காரணமாக பாபுல் சுப்ரியோ அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விடைபெறுகிறேன். பெற்றோா், மனைவி, நண்பா்கள் ஆகியோரிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டபிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை.

எந்தக் கட்சியிடமிருந்தும் அழைப்பு வரவில்லை. பாஜகவுடன் மட்டுமே தொடா்பில் இருக்கிறேன். கட்சியில் நீண்ட காலமாக இருந்துவிட்டேன். சிலருக்கு உதவிகளைச் செய்துள்ளேன். சிலரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளேன். நான் செய்த பணிகள் குறித்து மக்களே தீா்மானிக்க வேண்டும்.

அரசியல் தளத்தில் இடம்பெறாமலேயே சமூக சேவையைத் தொடர முடியும். அரசியலில் இருந்து விலகுவதற்கும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாமல் போனதற்கும் தொடா்புள்ளதா எனக் கேட்டால், ஓரளவுக்குத் தொடா்புள்ளது. மேலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் தொடங்கியதில் இருந்து மாநில பாஜக தலைவா்களுடன் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாபுல் சுப்ரியோவின் முகநூல் பதிவு குறித்து பதிலளிக்க மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT