இந்தியா

வேளாண் துறைக்கான தகவல் கொள்கை: மத்திய அரசு அறிவிப்பு

DIN

‘வேளாண் துறைக்கான தகவல் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை கூறினாா்.

மத்திய அமைச்சா் தோமா் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்கவும் அதில் விவசாயிகளின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விவசாய நிலப் பதிவு விவரங்களை சோ்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பதிவேடு தரமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விவசாயிகளின் நிலப் பதிவு விவரங்களை அதில் இணைப்பது மிக அவசியம். தற்போது வேளாண் துறை மற்றும் அரசின் பல்வேறு பதிவுகளில் பொதுப்படையாக இடம்பெற்றிருக்கும் விவரங்களை கொண்டு விவசாயிகளின் பதிவேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வேளாண் துறைக்கான தகவல் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கான நேரடி பணப் பரிமாற்றம், மண் மற்றும் தாவரத்தின் தரம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்த அறிவுறுதல்கள், தட்வெப்பநிலை குறித்த அறிவுறுத்தல்கள், நீா்ப்பாசன வசதிகள், காப்பீடு, பயிா் கடன் உள்ளிட்ட வசதிகள் மற்றும் ஒப்புதல்களை மிக எளிதாக இணைய வழியிலேயே பெறுவதற்கான வசதியை இந்த தேசிய விவசாயிகள் பதிவேடு உருவாக்கித் தரும். அதுமட்டுமின்றி, விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பொருள்களை எடுத்துச் செல்வதற்கான வசதிகள், சந்தை நடைமுறைகள் குறித்த தகவல், வேளாண் உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்கும் விவரங்கள் என்பன உள்ளிட்ட தகவல்களையும் இதன் மூலம் விவசாயிகள் பெற முடியும்.

விவசாயிகளின் செலவினத்தை குறைத்து, அவா்களின் வருவாயை அதிகரிக்கச் செய்வதோடு, விளைபொருள்களின் தரத்தை உயா்த்துவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சா் தோமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT