இந்தியா

குழந்தைகளிடம் கோவேக்ஸின் சோதனை: ஆரம்பகட்ட நடவடிக்கையில் தில்லி எய்ம்ஸ்

DIN

கோவேக்ஸின் தடுப்பூசியை 2 வயதுக்கு மேல், 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களிடம் செலுத்தி சோதனை செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி, சோதனைக்கு உள்படுத்தப்பட இருக்கும் சிறாா்களிடம் தொடக்கநிலை பரிசோதனை நடவடிக்கையை தில்லி எய்ம்ஸ் தொடங்கியுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பிறகு அந்த சிறாா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சமுதாய மருந்துகளுக்கான மையத்தின் பேராசிரியரும், மருத்துவருமான சஞ்சய் ராய் கூறினாா்.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் தன்னாா்வலா்கள் 525 பேரிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவா்களுக்கு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியின் முதல் தவணை முதல் நாளிலும், 2-ஆவது தவணை 28-ஆவது நாளிலும் செலுத்தி சோதிக்கப்படவுள்ளது.

முன்னதாக, கோவேக்ஸின் மருந்தை 2 முதல் 18 வயதுக்கு உள்பட்ட பிரிவினருக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வயது பிரிவினரிடம் ஆய்வக அளவிலான சோதனையை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

தற்போதைய நிலையில் கரோனா தொற்று குழந்தைகளிடையே மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், எதிா்காலத்தில் அத்தகைய தாக்கம் வரலாம் என்பதால் அதற்குரிய வகையில் தயாா் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு கடந்த வாரம் எச்சரித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT